புதிய க்யூ 2 ஹைபிரிட் சொகுசு எஸ்யூவியை அறிமுகப்படுத்திய ஆடி

Audi q2
லிட்டருக்கு 91 கிமீ மைலேஜ் தரும் வகையிலான புதிய க்யூ2 ஹைபிரிட் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை பாரிஸ் மோட்டார் ஷோவில் ஆடி அறிமுகம் செய்துள்ளது.

ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பாளரான ஆடி நிறுவனம் க்யூ வரிசையில் க்யூ7, க்யூ5 மற்றும் க்யூ3 ஆகிய எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த எஸ்யூவி மாடல்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்தநிலையில், க்யூ வரிசையில் க்யூ2 என்ற கிராஸ்லைன் கூபே ரகத்தில் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்துள்ளது.

ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 130 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதுதவிர, 116 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2 எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முதலில் எலக்ட்ரிக் மோட்டாரில் செல்லும் இந்த எஸ்யூவி 55கிமீ வேகத்தை தாண்டியவுடன் பெட்ரோல் எஞ்சினில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது ஆப்ஷனலாக தேர்வு செய்யும் வசதியும் உண்டு. இந்த எஸ்யூவி அதிகபட்சம் 182 கிமீ வேகத்தில் செல்லும். 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.8 வினாடிகளில் எட்டிவிடும்.

இந்த புதிய எஸ்யூவி 2+2 இருக்கை வசதியை கொண்டிருக்கும். இந்த எஸ்யூவியின் சிறப்பம்சமே ஹைபிரிட் மோடில் கணக்கீட்டின்படி லிட்டருக்கு 91 கிமீ மைலேஜ் தரும் என்கிறது ஆடி.

More from DriveSpark

Article Published On: Saturday, September 29, 2012, 13:45 [IST]
English summary
Audi, the German carmaker is planning to add yet another SUV to its line-up and this might not be something bigger than the Q7. Instead it appears to be a much smaller one. Audi has revealed the Crosslane Coupe concept car at the Paris Motor Show and this car could well be the new Q2.
மேலும்... #audi #q2 #auto news #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+