எர்டிகா புதிய மாடல் இல்லை:ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் விமர்சனம்

எர்டிகா என்ற பெயரில் புதிய எம்பிவி காரை மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய எம்பிவி கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜப்பானிலுள்ள சுஸுகி நிறுவனத்தின் வடிவைமப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த காருக்காக ரூ.430 கோடியை முதலீடு செய்துள்ளதாக சுஸுகி தெரிவித்தது. ஆனால், ஸ்விப்ட், ரிட்ஸ் வடிவமைக்கப்பட் அதே பிளாட்பார்மில்தான் இந்த கார் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், எர்டிகாவை புதிய மாடல் என்று கூற முடியாது என்று ஆஸ்திரேலிய ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர் மால்கம் பிலின் கூறியுள்ளார். எர்டிகாவை ஸ்விப்ட் எம்பிவி என்றுதான் கூறமுடியும். ஸ்விப்ட் பிளாட்பார்மில் ஏற்கனவே டிசையர் செடான் காரை சுஸுகி விற்பனை செய்கிறது.
அதேபோன்று, ஸ்விப்ட் எம்பிவி கார்தான் எர்டிகா. ஸ்விப்ட்டின் நீ்ட்டிக்கப்பட்ட வீல் பேஸ் கொண்ட மாடல்தான் எர்டிகா என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








