டிவி நிகழ்ச்சிகளின் இடைவேளைகளை ஆக்கிரமித்த வாகன விளம்பரங்கள்!

Tv Commercial
வாகனங்களை பிரபலப்படுத்துவதற்காக தற்போது தொலைக்காட்சிகளை முக்கிய ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டுள்ளன பல முன்னணி வாகன நிறுவனங்கள். குறிப்பாக, தர வரிசையில் முன்னிலையில் உள்ள நிகழ்ச்சிகளின் இடைவேளைகளை முழுமையாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ளதாகவே கூறும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

கார் மற்றும் பைக் மார்க்கெட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு போட்டி அதிகமாகியிருக்கிறது. இதனால், தங்களது தயாரிப்புகளை முன்னிலைப்படுத்த தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக கோடிகளை தண்ணீராய் வாரி இறைக்கின்றன கார் மற்றும் பைக் நிறுவனங்கள்.

மேலும், தொலைக்காட்சி விளம்பரங்கள் கவரும் வகையில் இருப்பதற்காக சினிமா நட்சத்திரங்களை பெரும் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்து வருகின்றன வாகன நிறுவனங்கள். மேலும், விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு தர வரிசையில் முன்னிலை வகிக்கும் நிகழ்ச்சிகளின் இடைவேளைகளை கேட்கும் தொகை கொடுத்து புக்கிங் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னணி தொலைக்காட்சியின் இரவு 7.00 மணி செய்திகளில் வேறு விளம்பரங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு வாகன விளம்பரங்கள் ஒளிபரப்பாகிறது. தவிர, தர வரிசையில் முன்னிலையில் இருக்கும் நெடுந்தொடர்களின் இடைவேளையிலும் வாகன விளம்பரங்களின் வாடை கனமாக வீசுகிறது. இதன்மூலம்,வாடிக்கையாளர்களை எளிதாக கவர முடியும் என்பதே வாகன நிறுவனங்களின் நம்பிக்கை.

இந்த நிலையில், தற்போது மார்க்கெட் சரியில்லாததால் கார் விற்பனையை அதிகரிக்க தொலைக்காட்சி விளம்பரங்களை அதிகரிக்க மாருதி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதற்காக, மார்க்கெட்டிங் செய்வதற்கான பட்ஜெட்டுக்கு கூடுதல் தொகையை ஒதுக்க அந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 20, 2012, 16:19 [IST]
English summary
The number of automobile advertisements particularly in prime time has increased in recent days. Manufacturers are spending more money to attract buyers even as sales and demand continue to show signs of a decline.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+