டீசல் கார்கள் மீது கூடுதல் வரி: கார் நிறுவனங்களின் பங்குகள் சரிவு

பங்குகள் வீழ்ச்சி
டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற தகவலால் கார் நிறுவனங்களின் பங்குகளில் திடீர் சரிவு ஏற்பட்டது.

டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்துக்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி கடிதம் எழுதினார்.

மொத்த டீசல் நுகர்வில் தனி நபர் வாகனங்கள் மட்டும் 15 சதவீதம் அளவுக்கு பங்கு வகிக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் டீசல் கார்களுக்கு 81,192 கோடி ரூபாயை மானியமாக ஒதுக்கப்ட்டது.

ஆனால், தொடர்ந்து டீசல் கார்களின் விற்பனை அதிகரித்து வருவதால் நடப்பு நிதி ஆண்டில் டீசல் மானியத்துக்கு 1,00,000 கோடியை மானியமாக ஒதுக்க வேண்டியிருக்கும். இதை கட்டுப்படுத்த டீசல் கார்கள் மீது கணிசமாக வரி விதிக்க வேண்டும் என்று தனது கடித்ததில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, டீசல் கார்கள் மீது 2.5 லட்சம் வரை கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி மும்பை பங்கு சந்தையில் எதிரொலித்தது.

மும்பை பங்கு சந்தையின் வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் கார் நிறுவனங்களின் பங்குகளில் புதன்கிழமை திடீர் சரிவு ஏற்பட்டது. டாடா மோட்டார்ஸ் பங்குகள் 1.07 சதவீதமும், மஹிந்திராவின் பங்குகள் 1.48 சதவீதமும், மாருதி சுஸுகியின் பங்குகள் 2.95 சதவீதமும் சரிவு கண்டன.

More from DriveSpark

Article Published On: Saturday, June 16, 2012, 14:58 [IST]
English summary
Auto stocks dropped on Wednesday on reports of a hike in excise duty on diesel cars. The stocks of the Tata Motors was down 1.07%, M&M lower by 1.48% and Maruti Suzuki was lower by 2.95% on BSE at 10.50 am IST.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+