கார் விற்பனை மந்தம்: ஏற்றுமதியை அதிகரித்த நிசான், டொயோட்டா

Car Export
கார் விற்பனை மந்தமடைந்துள்ளதால், வெளிநாடுகளுக்கு கார் ஏற்றுமதியை அதிகரிக்க நிசான் , டொயோட்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

கார் விற்பனை மந்தமடைந்துள்ளதால் இந்தியாவை நம்பி பெரும் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு கார் நிறுவனங்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. இந்த நிலையில், நிலைமை சமாளித்து மீண்டும் வருவதற்கு வெளிநாடுகளுக்கு கார் ஏற்றுமதியை அதிகரிக்க பல முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளுக்கு 50,000 சன்னி செடான் கார்களை ஏற்றுமதி செய்ய நிசான் திட்டமிட்டுள்ளது. இதேபோன்று, டொயோட்டா நிறுவனமும் கார் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, எட்டியோஸ் காரின் ஏற்றுமதியை துவங்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வோக்ஸ்வேகன் நிறுவனம் இடதுபுற டிரைவிங் கொண்ட வென்ட்டோ காரை ஏற்றுமதி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவனம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை இந்தியாவிலிருந்து பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதேபோன்று, அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் டஸ்ட்டர் எஸ்யூவியை ஏற்றுமதி செய்ய ரினால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மூலம் இழப்பை சரிகட்ட முடியும் என்று அந்த நிறுவனங்கள் கருதுகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, June 25, 2012, 16:26 [IST]
English summary
With India being an export hub due to the cost advantage and other facilities, global car makers Nissan and Toyota are planning more exports from the country. After small car exports, these car makers have started to export mid-size cars to other countries.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+