மகள் ஆராத்யாவுக்காக ரூ.1.5 கோடியில் புதிய கார் வாங்கும் அபிஷேக் பச்சன்

பாலிவுட் நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. பாலிவுட் உலகின் முன்னணி நட்சத்திரங்களின் குடும்ப வாரிசாக வந்துள்ள இந்த குழந்தைக்கு தற்போதுதான் ஆராத்யா என்று பெயர் சூட்டியுள்ளனர்.
பெயர் சூட்டிய கையோடு தற்போது ஆராத்யாவுக்காக தந்தை அபிஷேக் பச்சன் புதிய ஆடி கார் ஒன்றையும் புக்கிங் செய்துள்ளாராம். ஆராத்யா பிறந்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்றது ஆடி காரின்தான். இந்த நிலையில், ஆராத்யாவின் பெயரில் வரும் ஆங்கில முதல் எழுத்தான ஏ என்ற பெயரில் இருக்கும் வகையில் புதிய காரை வாங்க அபிஷேக் தீர்மானித்தாராம்.
இதன்படி, தற்போது ஆராத்யாவுக்காக ஆடி ஏ8 செடான் காரை புக்கிங் செய்துள்ளாராம். ஆடி சொகுசு கப்பல் என்று அழைக்கும் அளவுக்கு நவீன வசதிகள் கொண்ட காரில்தான் இனி ஆராத்யாவை வெளியில் அழைத்து செல்ல அபிஷேக்-ஐஸ் தம்பதி முடிவு செய்துள்ளனராம்.
ஆராத்யாவுக்காக புக்கிங் செய்யப்பட்டுள்ள ஆடி ஏ8 செடான் கார் மும்பையில் ரூ.1.5 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








