இந்த ஆண்டு இறுதியில் குட்டிக் காரை அறிமுகப்படுத்த பஜாஜ் திட்டம்

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ முதன்முறையாக 4 சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளது. ஆர்இ60 என்ற குறியீட்டு பெயரில் இந்த குட்டிக் கார் டெல்லி ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
ரினால்ட்- நிசான் கூட்டணியில் இந்த வாகனத்தை விற்க பஜாஜ் முதலில் முயற்சி எடுத்தது. ஆனால், வடிவமைப்பு, தரத்தில் எதிர்பார்த்த அளவு இல்லை என்று கூறி ரினால்ட், நிசான் ஆர்இ60 விற்பனை செய்யும் திட்டத்திலிருந்து கழன்று கொண்டன.
இந்த நிலையில், ஆட்டோரிக்ஷாவுக்கு மாற்றாக இந்த குட்டிக் காரை விற்பனை செய்ய பஜாஜ் முடிவு செய்துள்ளது.இந்த ஆண்டு இறுதியில் ஆர்இ60ஐ விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளதாம்.
ஆட்டோ ரிக்ஷாவை விட அதிக பாதுகாப்பு, மைலேஜ், விலை ஆகியவை ஆர்இ60க்கு புதிய மார்க்கெட்டை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று பஜாஜ் நம்புகிறது. மேலும், பைக்கிலிருந்து கார் வாங்க நினைக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு ஏற்றதாக இந்த வாகனம் இருக்கும் என்று பஜாஜ் ஆட்டோ நம்புகிறது.
இந்த புதிய பயணிகள் வாகனத்தில் 20 பிஎஸ் திறனை வெளிப்படுத்தும் 200 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.4 பேர் பயணம் செய்யும் வசதிகொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








