புனேயில் பஜாஜ் ஆர்இ60 பயணிகள் வாகனம் ரகசிய சோதனை

முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்று பஜாஜை கேட்கத் தோன்றுகிறது. ஆம். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆர்இ60 வாகனத்தை முக்காடு போட்டு சோதனை நடத்தி வருகிறது பஜாஜ். புனே அருகே சமீபத்தில் சோதனை நடத்தப்பட்ட ஆர்இ60 படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. காரும் இல்லாமல், ஆட்டோரிக்ஷாவும் இல்லாமல் இருக்கும் இந்த புதிய பயணிகள் வாகனம் குவாட்ரிசைக்கிள் ரகத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவாட்ரிசைக்கிள் வாகனங்களை சாலைகளில் இயக்க மத்திய அரசு தலையசைத்துள்ளதால் விரைவில் பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் ரகத்தில் வரும் என தெரிகிறது. ஹார்டு டாப் எனப்படும் கடின கூரை, கதவுகள் இருப்பதால் ஆட்டோரிக்ஷாவைவிட கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

எஞ்சின்

எஞ்சின்

20 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 200சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 2752 மிமீ நீளம், 1312 மிமீ அகலம், 1650 மிமீ உயரம் கொண்டதாக இருக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

நகர்ப்புறங்களில் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலைகளில் செல்லும்போது லிட்டருக்கு 35 கிமீ மைலேஜையும் தரும் என்கிறது பஜாஜ்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

2+2 இருக்கை வசதி கொண்டிருப்பதால் 4 பேர் அமர்ந்து செல்லலாம்.

விலை

விலை

ரூ.1.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, நானோ காரை விட குறைந்த விலையிலும், ஆட்டோரிக்ஷாவைவிட விலை கூடுதல் விலையிலும் வர இருக்கிறது.

அம்சங்கள்

அம்சங்கள்

ஏசி, பவர் ஸ்டீயரிங், ஏர்பேக்ஸ் உள்ளிட்ட எந்த வசதிகளும் இருக்காது. கதவுகள் இருப்பதால் மழைக்காலத்தில் மிகுந்த பயனளித்தாலும், ஏசி இல்லாததால் சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கோடை காலத்தில் இதனுள் அமர்ந்து பயணம் செய்வது சற்று கடினமாக இருக்கலாம். இந்த வாகனத்தில் சீட் பெல்ட் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது ஆறுதலான விஷயம்.

Spy Images Sources: Anything On Wheels

More from DriveSpark

Article Published On: Tuesday, October 23, 2012, 11:45 [IST]
English summary
The launch of the Bajaj RE60 has been a topic of suspense since its unveiling at the Delhi Auto Expo this January. But the latest buzz is that, the company is planning to launch this four wheeler by end of this fiscal. Bajaj Auto is already testing RE60 on Indian roads. Here are the few spy shots from Anything On Wheels blog.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+