லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் தருகிறதாம் பஜாஜ் குட்டி

Bajaj RE60
சோதனையின்போது பஜாஜ் வடிவமைத்துள்ள குட்டிக் கார் லிட்டருக்கு 35கிமீ முதல் 40 கிமீ மைலேஜ் தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோ ரிக்ஷாவுக்கு மாற்றாக அதிக பாதுகாப்பு கொண்ட புதிய நான்கு சக்கர வாகனத்தை பஜாஜ் ஆட்டோ வடிவமைத்துள்ளது. அந்த நிறுவனம் வடிவமைத்த முதல் நான்கு சக்கர வாகனம் இதுதான்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்குள் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இந்த புதிய குட்டிக் காரின் சோதனை ஓட்டங்களை பஜாஜ் ஆட்டோ தற்போது நடத்தி வருகிறது.

இதில், ஒரு லிட்டருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரை மைலேஜ் தருகிறதாம் இந்த குட்டிக் கார். எனவே, இந்த குட்டிக் கார் அறிமுகம் செய்யப்படும்போது அதிக மைலேஜ் கொடுக்கும் நான்கு சக்கர வாகனம் என்ற பெருமையை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

200சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த குட்டி நான்கு சக்கர வாகனத்தை வரும் தீபாவளி பண்டிகையின்போது விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, May 12, 2012, 12:29 [IST]
English summary
Country's second largest two wheeler maker Bajaj auto said, its first four wheeler RE60, fitted with a one-cylinder, 200 cc engine, would deliver 35 to 40 Km per liter in the testing conditions.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+