விதிமீறியதால் 1317 டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல்: பெங்களூர் போலீஸ் நடவடிக்கை

Bangalore Traffic Police
கடந்த 3 மாதங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1317 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமங்களை பெங்களூர் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

வாகன பெருக்கத்திற்கு தக்கவாறு போக்குவரத்து விதிமுறை மீறல்களும் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை பிடிக்க பெங்களூர் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக, வாகன தணிக்கையை பெங்களூர் போலீசார் தீவிரப்படுத்தினர். இதில், கடந்த 3 மாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1317 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமங்களை பெங்களூர் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுனர் உரிமங்களை சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகங்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, முக்கிய சிக்னல்களில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் வழியாக சிக்னல் ஜம்ப், ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் மொபைல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து எச்சரிக்கை செய்தும், பிரச்சாரம் செய்தும் பயனில்லை என்பதால் தற்போது குற்றங்களை தடுக்க வேறு வழியின்றி ஓட்டுனர் உரிமங்களை பறிமுதல் செய்யும் நிலைக்கு போலீசார் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 11, 2012, 14:55 [IST]
English summary
The increasing number of traffic rule violations in Bangalore seems to have made the city traffic police take drastic steps. The Bangalore traffic police have seized as many as 1,317 driving licenses of serious traffic offenders in the past three months.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+