யூஸ்டு கார் வாங்கும்போது உஷாரா இருங்க

Alto
யூஸ்டு கார் வாங்கும்போது அதிக விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம். வாகனத்தின் கண்டிஷன் முதல் டாக்குமென்ட் வரை அனைத்திலும் மோசடிகள் நடக்க வாய்ப்புகள் அதிகம். நாம் எவ்வளவு உஷாராக இருந்தாலும் சில சமயங்களில் ஏமாறுவது உண்டு. நாக்பூர் நகரிலுள்ள ஃபிரென்ட்ஸ் காலனியை சேர்ந்தவர் போப்தே.

கடந்த 2007ம் ஆண்டு அக்டோபரில் நாக்பூர் காம்ப்தி சாலையில் இருக்கும் மாருதி ட்ரூ வேல்யூ யூஸ்டு கார் ஷோரூமில் செகன்ட் ஹேண்ட் ஆல்ட்டோ கார் ஒன்றை வாங்கினார். ரூ.2.60 லட்சத்தை ரொக்கமாக கொடுத்து காரை வாங்கியுள்ளார். மேலும், காருக்குண்டான ஆர்சி புத்தகம், இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட அனைத்தையும் கையுடன் பெற்றுக்கொண்டு விட்டார்.

இந்த நிலையில், கார் வாங்கி ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில், கடந்த மாதம் போப்தே வீட்டுக்கு மஹாராஷ்டிர வங்கியிலிருந்து அதிகாரிகள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் போப்தே வாங்கிய ஆல்ட்டோ கார் கடனில் இருப்பதாகவும், தவணை தொகைகள் சரியாக செலுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதால் காரை பறிமுதல் செய்வதாகவும் தெரிவித்தனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த போப்தே அதிகாரிகளிடம் தனது நிலையை எடுத்துக் கூறி ஆவணங்களையும் காட்டியுள்ளார். ஆனால், வங்கி அதிகாரிகள் கார் கடனில் இருப்பதற்கான ஆவணங்களை சுட்டிக் காட்டினர். இதனால், வேறு வழியில்லாமலும், அக்கம்பக்கத்தினர் மத்தியில் அவமானமாகிவிடும் என்ற நோக்கத்திலும் காரை எடுத்துச் செல்லுமாறு வங்கி அதிகாரிகளிடம் கூறிவிட்டார்.

இதையடுத்து, இந்த மோசடி குறித்து போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்றுள்ளார். அங்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் கொடுத்த புகாரை வாங்க மறுத்த போலீசார் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறிவிட்டனர். இதையடுத்து, கார் வாங்கிய ஷோரூமுக்கு சென்று கேட்டபோது என்ஓசி எனப்படும் கடன் முடிந்ததற்கான சான்றிதழுடன்தான் காரை விற்றிருக்கிறோம். எனவே, சம்பந்தப்பட்ட வங்கியை அணுகுமாறு கூறினர்.

மனம் நொந்து போன போப்தே வங்கியை அணுகி இதுகுறித்து விசாரித்தபோது, அந்த காருக்கு முதல் உரிமையாளரான முஸ்டாக் அகமது குரேஷி தவணை தொகையை முழுமையாக கட்டவில்லை. மேலும், அந்த காருக்கு கடன் வழங்கிய வங்கியிலேயே அவர் ஊழியராக வேலை பார்த்ததும், அதை பயன்படுத்தி காருக்கு என்ஓசி எனப்படும் தடையில்லா சான்றிதழை பெற்று காரை மாருதி ட்ரூ வேல்யூ நிறுவனத்தில் விற்றதும் தெரிந்தது.

கடன் முடிக்காத காருக்கு எவ்வாறு என்ஓசி சான்று கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு வங்கி மேலாளரிடமிருந்து முறையான பதில் இல்லை. சரி காராவது கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்தாலும், 10 நாட்களுக்கு மேல் போப்தேவை வங்கி அதிகாரிகள் அலைகழித்துள்ளனர்.

இதனால், கடுப்பாகி போன அவர் போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார். பின்னர், அங்கு வைத்து சமாதானம் பேசி கடனை குரேஷி செலுத்த வைத்துள்ளனர். பின்னர்தான், வங்கி அதிகாரிகளிடமிருந்து காரை மீட்டு வந்துள்ளார் போப்தே. அத்தோடு நில்லாமல், கடன் கட்டி முடிக்கப்பட்டதற்கான ஒரிஜினல் என்ஓசியுடன் வங்கி அதிகாரிகளிடமிருந்து கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், ரொக்கமாக பணம் கொடுத்து வாங்கிய காருக்கு அலையாய் அலைந்த போப்தேவின் கேள்விகளுக்கு வங்கி அதிகாரிகளோ, மாருதி ட்ரூ வேல்யூ நிறுவன மேலாளர் மற்றும் போலீசார் என்று யாருமே உரிய பதிலை இதுவரை கூறவில்லை.

எனவே, யூஸ்டு கார் வாங்கும்போது கடன் முடிந்து என்ஓசி வாங்கியிருந்தால் கூட சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் ஒரு விசாரணை போடுவது உத்தமம். இல்லையெனில், போப்தே போல காசையும் கொடுத்து காண்டுவாதத்தை விலை கொடுத்து வாங்கிய கதையாகிவிடும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 13, 2012, 10:24 [IST]
English summary
If you plan to buy a second hand car even from a reputed agency, think twice. It may land you in immense trouble like Rajesh Bobde whose car was hauled away by Bank of Maharashtra authorities under false accusations.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+