போர்ஷே பிளாட்பார்மில் கார் தயாரிக்கப்போகும் பென்ட்லீ!

பென்ட்லீ மற்றும் போர்ஷே ஆகிய ஆடம்பர கார் தயாரிப்பாளர்கள் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எதிர்கால மார்க்கெட்டுக்கு தகுந்தவாறு தனது கீழ் இயங்கும் அனைத்து பிராண்டுகளுக்கும் புதிய பிளாட்பார்ம்களை உருவாக்குவதில் போக்ஸ்வேகன் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில், தற்போது போர்ஷேயின் அடுத்த தலைமுறை பிளாட்பார்மாக கருதப்படும் எம்எஸ்பி பிளாட்பார்மில் பென்ட்லீ கார்களும் வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய எம்எஸ்பி பிளாட்பார்மில் உருவாகும் கார்கள் 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் கொண்டதாக இருக்கும்.
இந்த புதிய பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் கார்கள் ஸ்டீல் மற்றும் அலுமினிய கலவையில் உருவாகும் என்பதால் இலகு எடை கொண்டதாக அதேசமயத்தில் அதிக உறுதித்தன்மை கொண்டதாகவும் இருக்கும். இதனால், தற்போதைய பென்ட்லீ கார்களின் எடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும்.
இதுதவிர, பென்ட்லீயின் அடுத்த தலைமுறை கார்களில் தற்போதையை 6.5 லிட்டர் வி8 எஞ்சினுக்கு பதிலாக போக்ஸ்வேகனின் புதிய தலைமுறை வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








