இந்தியாவில் ஏ கிளாஸ் காரை தொடர்ந்து சோதனை நடத்தும் பென்ஸ்

 பென்ஸ் ஏ கிளாஸ்
இந்தியாவில் ஏ கிளாஸ் காரை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது பென்ஸ். எனவே, அடுத்த ஆண்டு நிச்சயம் இந்த புதிய கார் நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

சொகுசு கார் மார்க்கெட்டில் குறைந்த விலை கொண்ட புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை கடந்த சில மாதங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்தது. ஏ கிளாஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய கார் விரைவில் இந்திய மார்க்கெட்டிலும் பென்ஸ் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனை உறுபதிப்படுத்தும் விதமாக கடந்த மாதம் முதல் இந்த புதிய கார் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய ஏ கிளாஸ் காரை இந்தியாவில் பென்ஸ் ரகசியமாக சோதனை நடத்தியிருக்கிறது. 4292 மிமீ நீளமும், 1780 மிமீ உயரமும், 1433 மிமீ அகலமும் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

உட்புறத்தை பொறுத்தவரையிலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பி கிளாஸ் காருக்கு இணையான தரம் கொண்டதாக இருக்கும். இந்த புதிய காரில் 1.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 134 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 7 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டு வர இருக்கிறது.

ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிப்பதால் இந்த கார் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 30, 2012, 12:07 [IST]
English summary
The A class, much awaited car from Mercedes Benz caught testing in Indian soil . The new car will be priced between INR 15 lakhs to 20 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+