பட்ஜெட்டில் பல்க் வரி: கார் விலையை ரூ.3 லட்சம் வரை உயர்த்த பென்ஸ் முடிவு

Benz GL SUV
பட்ஜெட்டில் பெரிய கார்கள் மீதான வரி அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, தனது கார்களின் விலையை ரூ.3 லட்சம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக பென்ஸ் தெரிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் எதிர்பாராத வகையில் சொகுசு கார்களுக்கு கணிசமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சொகுசு கார் நிறுவனங்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளது. இதனால், தங்கள் கார் விற்பனை கணிசமாக பாதிக்கப்படும் என்று அந்த நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, தனது கார்கள் விலையை ரூ.3 லட்சம் வரை பென்ஸ் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இயக்குனர் சுகாஸ் கத்லாஸ்கர் கூறியதாவது:

"வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். மத்திய பட்ஜெட்டில் சொகுசு கார்களுக்கு வரிச் சலுகை ஏதும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால், நேர்மாறாக வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது கார் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வரி உயர்வையடுத்து எங்களது கார்களின் விலையை ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை உயர்த்த ஆலோசித்து வருகிறோம். ஆனால், இறுதி முடிவு இன்னும் எடுக்க வில்லை," என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, March 16, 2012, 18:15 [IST]
English summary
German luxury car maker Mercedes benz has decided to hike car prices upto Rs.3 lakhs after the tax hike in union budget.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+