ரூ.90 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த புதிய பென்ஸ் சிட்டி பஸ்

Benz City Bus
நகர்ப்புற போக்குவரத்துக்கு ஏற்ற புதிய சொகுசு சிட்டி பஸ்சை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சிட்டி பஸ் வால்வோ சிட்டி பஸ்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று தெரிகிறது.

மாநகர போக்குவரத்தில் தற்போது வால்வோ சொகுசு சிட்டி பஸ்கள் சிறப்பான போக்குவரத்து வசதியை மக்களுக்கு வழங்கி வருகின்றன. போட்டி எதுவும் இல்லாமல் இருந்து வந்த இந்த மார்க்கெட்டில் தற்போது பென்ஸ் நிறுவனத்தால் வால்வோவுக்கு கடும் போட்டி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ஆம், நகர்ப்புற போக்குவரத்திற்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட புதிய தாழ்தள சொகுசு பஸ்சை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 37 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த பஸ் குளிர்சாதன வசதியுடன் கூடியது.

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட இந்த புதிய சிட்டி பஸ்சில் 7,200 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 252 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த புதிய சிட்டி பஸ்சின் எஞ்சின் இரைச்சலை அதிகம் வெளிப்படுத்தாமல் ஸ்மூத்தாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகிலுள்ள சகன் ஆலையில் தயாரிக்கப்படும் இந்த புதிய சிட்டி பஸ்களுக்கு, பென்ஸ் கூட்டணி சர்வதேச கூட்டு நிறுவனமான எம்விசி பாடி கட்டும் பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.50 கோடியில் புதிய பஸ் பாடி கட்டும் ஆலையும் அமைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 9, 2012, 15:15 [IST]
English summary
German based commercial vehicle maker Mercedes benz has introduced new city bus in India starting price at Rs.90 lakhs. The new benz city bus will give tough fight to Volvo city buses.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+