வால்வோவுக்கு போட்டியாக களமிறங்கும் புதிய பென்ஸ் சிட்டி பஸ்

மாநகர போக்குவரத்தில் தற்போது வால்வோ நிறுவனத்தின் சிட்டி பஸ்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றன. வால்வோ பஸ்கள் பெற்ற வெற்றியை பார்த்து பல்வேறு நிறுவனங்களும் தற்போது சொகுசு சிட்டி பஸ் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில், தற்போது ஜெர்மனியை சேர்ந்த மெர்டிஸ் பென்ஸ் நிறுவனம் குளிர்சாதன வசதிகொண்ட புதிய சொகுசு சிட்டி பஸ்சை விற்பனைக்கு கொண்டு வருகிறது. உலகிலேயே பஸ் தயாரிப்பில் பென்ஸ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.
மேலும், அந்தந்த நாடுகளின் சாலை தரம் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கும் தொழில்நுட்பமும் பென்ஸ் கையிலிருப்பதால் பல்வேறு நாடுகளில் பென்ஸ் பஸ்கள் வெற்றி பெற்றுள்ளன. நம் நாட்டில் தற்போது நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் இன்டர்சிட்டி பஸ்களை ஏற்கனவே பென்ஸ் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது பின்புற எஞ்சின் கொண்ட சொகுசு சிட்டி பஸ்சை விற்பனைக்கு கொண்டு வருகிறது பென்ஸ். புதிய பென்ஸ் சிட்டி பஸ் நிச்சயம் வால்வோ பஸ்களுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








