இந்தியாவில் புதிய எம்எல் க்ளாஸ் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் பென்ஸ்

Benz ML class
சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எம்எல் க்ளாஸ் பிரிமியம் எஸ்யூவியை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் பிரிமியம் கார் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருந்த பென்சை பிஎம்டபிள்யூ கீழே இறக்கி விட்டது. இதைத்தொடர்ந்து, மீண்டும் முதலிடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை பென்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆடியின் விற்பனையும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

பல புதிய மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட தனது புதிய எம்எல் க்ளாஸ் பிரிமியம் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது பென்ஸ்.

இந்த புதிய எஸ்யூவியை உதிரிபாகங்களாக இறக்குமதி செய்து மஹாராஷ்டிர மாநிலம், சகனில் உள்ள தனது அசெம்பிளிங் ஆலையில் உற்பத்தி செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது. இதனால், இறக்குமதி வரி வெகுவாக குறையும்.

இதன்மூலம், பிற நிறுவனங்களின் பிரிமியம் எஸ்யூவி மாடல்களுக்கு கடும் போட்டி தரும் வகையில், இந்த புதிய எஸ்யூவியின் விலையை நிர்ணயித்து விற்பனைக்கு கொண்டு வர பென்ஸ் திட்டமி்ட்டுள்ளது.

மேலும், தனது சகன் ஆலையின் உற்பத்தியையும் இருமடங்கு உயர்த்துவதற்கு பென்ஸ் திட்டமிட்டுள்ளது. தவிர, அந்த ஆலையில் பெயிண்ட்டிங் பிரிவும் துவங்க பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 5, 2012, 10:55 [IST]
English summary
German luxury car maker Mercedes benz planning to launch ML class premium suv in India soon. The new ML class suv recently launched in global market and overhelming response from the customers. The new ML class will be imported ckd units and will be assembled in Chakan plant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+