குறைவான விலையில் புதிய எம் கிளாஸ் எஸ்யூவி: பென்ஸ் அறிமுகம்

மார்க்கெட்டில் முன்னிலை பெறும் விதத்தில் குறைந்த விலை மாடல்களை அறிமுகப்படுத்துவதில் பென்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. எம் கிளாஸ் எஸ்யூவி வரிசையில் தற்போது எம்எல் 350 சிடிஐ எஸ்யூவி பென்ஸ் விற்பனை செய்து வருகிறது.
கடந்த மேமாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த 3ம் தலைமுறை எம் கிளாஸ் எஸ்யூவியில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதைவிட குறைந்த திறன் கொண்ட எஞ்சினுடன் குறைவான விலையில் தற்போது புதிய எம் கிளாஸ் எஸ்யூவியை பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
எம்எல் 250சிடிஐ என்ற புதிய எஸ்யூவி எம்எல்350சிடிஐ மாடலைவிட ரூ.10.4 லட்சம் குறைவான விலையில் வந்துள்ளது. இந்த புதிய மாடலில் 206 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் ட்வின் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய எம் கிளாஸ் எஸ்யூவி ஆடி க்யூ5 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








