குறைந்த விலை பி கிளாஸ் காருடன் களத்தில் குதிக்கும் பென்ஸ்!

மினி எம்பிவி அல்லது பெரிய ஹேட்ச்பேக் கார் என்று கூறக்கூடிய வடிவமைப்பை கொண்டிருக்கும் இந்த புதிய கார், ஆடி க்யூ3 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஆகிய கார்களுடன் விலையில் மட்டும் போட்டியிடும். ஆனால், வடிவமைப்பில் வேறுபடுகிறது.
காம்பெக்ட் சொகுசு காராக வரும் பி கிளாஸ் தற்போது அராய் சோதனை மையத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சோதனைகள் இன்னும் ஓரிரு வாரத்தி்ல முடிவடைந்துவிடும் என்று தெரிகிறது.
இதன்பிறகு பி கிளாஸ் அறிமுகத்துக்கு பென்ஸ் நாள் குறிக்க உள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.8 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டூவல் கிளட்ச் ட்ரான்ஸ்மிஷனுடன் பி கிளாஸ் விற்பனைக்கு வருகிறது. மேலும், பவர் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசலில் இரண்டு மாடல்கள் விற்பனைக்கு வருகிறது.
ரூ.23 லட்சம் விலையில் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வர மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. சிபியூ என்று முறையில் உதிரிபாகங்களாக இறக்குமதி செய்து சகனில் உள்ள தொழிற்சாலையில் இந்த புதிய கார் அசெம்பிள் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








