ரெனோ-பென்ஸ் கூட்டணியில் அடுத்த தலைமுறை கே9கே எஞ்சின்!

ரினால்ட்டின் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் எரிபொருள் சிக்கனம், பெர்ஃபார்மென்ஸ் ஆகியவற்றில் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளன. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரினால்ட் மற்றும் நிசான் ஆகிய நிறுவனங்களின் பெரும்பாலான கார்களில் இந்த எஞ்சின்தான் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், உலக அளவில் கார்பன் புகையை குறைத்து வெளியிடும் எஞ்சின்கள் தயாரிப்பிற்கு அனைத்து நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. 2020ம் ஆண்டு ஐரோப்பிய மாசுக் கட்டுப்பாடு விதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் அதற்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட எஞ்சின்களை தயாரிக்கும் பணிகளை பல நிறுவனங்கள் முடுக்கி விட்டுள்ளன.
அந்தவகையில், அடுத்த தலைமுறை அம்சங்களை கொண்ட புதிய கே9கே எஞ்சினை வடிவமைப்பில் ரினால்ட் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இணைந்து செயல்பட உள்ளன. பிஎம்டபிள்யூவின் 3 சிலிண்டர் டீசல் எஞ்சினுக்கு இணையான அம்சங்களுடன் 4 சிலிண்டர்களுடன் புதிய கே9கே எஞ்சினை உருவாக்க இருப்பதாக பென்ஸ் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த அம்சங்களுடன் வரும் இந்த புதிய டீசல் எஞ்சின் 2016ம் ஆண்டில் மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன.இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஏ கிளாஸ் மற்றும் பி கிளாஸ் கார்களில் பொருத்த பென்ஸ் முடிவு செய்துள்ளது. இதேபோன்று, நிசான் மற்றும் நிசான் கார்களிலும் இந்த புதிய எஞ்சின் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








