சென்னையில் புதிய பென்ஸ் காரை ஸ்னேகா-பிரசன்னா தம்பதி அறிமுகம் செய்கிறது!

குறைந்த விலை சொகுசு காரை பென்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. மினி எம்பிவி தோற்றம் கொண்ட இந்த சொகுசு ஹேட்ச்பேக் கார் கடந்த மாதம் இந்திய மார்க்கெட்டில் பென்ஸ் அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த பி கிளாஸ் காரை பென்ஸ் அறிமுகம் செய்து வருகிறது. இதன்படி, இன்று மாலை சென்னையில் பென்ஸ் பி கிளாஸ் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காரை ஸ்னேகா-பிரசன்னா நட்சத்திர தம்பதியர் அறிமுகம் செய்ய இருப்பதாக மோட்டார் விகடன் தகவல் கூறுகிறது.
ஆடி க்யூ3, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஆகிய எஸ்யூவி ரக கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில் இந்த கார் இருக்கும். சென்னையில் ரூ.25 லட்சத்திற்குள் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








