3 டிரக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்த பாரத் பென்ஸ்

Benz trucks
25டன் முதல் 31 டன் சுமை இழுக்கும் திறன் கொண்ட பிரிவில் 3 புதிய டிரக் மாடல்களை முதலாவதாக விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது பாரத் பென்ஸ்.

2523ஆர், 3123ஆர் மற்ரும் 2523சி ஆகிய இந்த மூன்று புதிய டிரக்குகளும் டெய்ம்லரின் ஆக்ஸர் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டவை. இந்திய சாலைநிலை மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்ப மாற்றங்களுடன் பாரத் பென்ஸ் பிராண்டில் வந்திருக்கின்றன.

இந்த டிரக்குகளில் 230 எச்பி பவரை வெளிப்படுத்தும் 6 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, அடுத்த 17 மாதங்களில் மேலும் 14 புதிய டிரக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்த பாரத் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

டிரக்குகளை அறிமுகப்படுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய பாரத் பென்ஸ் சந்தைப்படுத்துதல், விற்பனை மற்றும் சேவைப் பிரிவு துணைத் தலைவர் வி.ஆர்.வி.பிரசாத் கூறுகையில்," நாடு முழுவதும் உள்ள 28 டீலர்கள் வழியாக பாரத் பென்ஸ் டிரக்குகள் விற்பனை செய்யப்படும்.

வாடிக்கையாளர்கள் ஒரே கூரையின் கீழ் விற்பனை, நிதி உதவி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒருங்கிணைந்து பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன," என்றார்.

இந்த புதிய டிரக் மாடல்கள் ரூ.15.7 லட்சம் முதல் ரூ.20.2 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆலையில் இந்த டிரக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

டிரக்குகளுக்கு கடன் உதவி வழங்கும் வகையில் எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, சுந்தரம் பைனான்ஸ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி லிட் ஆகிய 4 நிறுவனங்களுடன் பாரத் பென்ஸ் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 28, 2012, 11:45 [IST]
English summary
Geramny's Daimler AG subsidiary Bharat Benz has launched 3 new truck models in Indian market.Three heavy-duty BharatBenz trucks in 25 tonne and 31 tonne category – 2323R and 3123R for the haulage segment and 2523C for the construction segment – all based on the Axor platform
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+