மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ் பயன்படுத்திய கார் ஏலம் விடப்படுகிறது
மைக்ரோசாப்ட் அதிபரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் பயன்படுத்திய பழைய போர்ஷே கார் அடுத்த மாதம் ஏலம் விடப்படுகிறது.
1975ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில்கேட்ஸ் தனது நண்பர் பால் ஆலமுடன் இணைந்து துவங்கினார். மைக்ராசாப்ட் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகளில்( 1979ம் ஆண்டு) போர்ஷே 911 காரை பில்கேட்ஸ் வாங்கினார். பின்னர் 1990ம் ஆண்டு இந்த காரை ஆஸ்திரியாவே சேர்ந்த ஒருவரிடம் விற்றுவிட்டார். பலர் கைமாறிய நிலையில், இந்த கார் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது.

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள ஏல மையத்தில் இந்த கார் வரும் ஜூன் 2ந் தேதி ஏலம் விடப்பட உள்ளது. 3.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த காரை வாங்கிய ஏல நிறுவனம் அதிகம் செலவழித்து தற்போது புதுப்பொலிவு கொண்டதாக மாற்றியுள்ளது.
ரூ.32 லட்சம் முதல் ரூ.40 லட்சத்துக்குள் இந்த காருக்கு குறைந்த பட்ச ஏலத் தொகை நிர்ணயிக்க ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த காரை பற்றி மற்றொரு சுவாரஸ்ய தகவல் இருக்கிறது.
ஒருமுறை வரம்புக்கு மீறி அதிவேகத்தில் ஓட்டிச் சென்றதற்காக ஒரே இரவில் அடுத்தடுத்து மூன்று முறை பில்கேட்ஸ் மீது வழக்குப் பதிவு வாஷிங்டன் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அத்தோடு, பில்கேட்ஸ் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குதாரரும், பில் கேட்சின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான பால் ஆலன்தான் அவருக்கு ஜாமீன் கொடுத்து விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








