ரூ.2,000 விலையில் பிளாக் டெக்கர் வழங்கும் மினி வாக்கம் க்ளீனர்

இதனால், துர்நாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, காரின் வெளிப்புறத்தை சுத்தப்படுத்துவது போன்று உட்புறத்தை அதைவிட சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
கைக்கு எட்டாத மற்றும் கண்ணுக்கு தெரியாத இடுக்குகளில் இருக்கும் தூசிகளை சுத்தம் செய்வதற்கு கார் வாக்கம் க்ளீனர்கள் பயன்படுகின்றன. மார்க்கெட்டில் பல்வேறு நிறுவனங்கள் கார் வாக்கம் க்ளீனர்களை விற்பனை செய்து வருகின்றன. இதில், பிளாக் அண்ட் டெக்கர்(Black& Decker) நிறுவனம் ரூ.2,000 விலையில் கார் வாக்கம் க்ளீனரை விற்பனை செய்கிறது.
ஆன்லைன் மூலமும் ஆர்டர் செய்து இந்த வாக்கம் க்ளீனரை பெற முடியும். காரின் டேஷ்போர்டில் இருக்கும் மொபைல்போன் சார்ஜர் பாயிண்டிலேயே இதை சொருகி கொள்ளலாம். 5 மீட்டர் ஒயர் கொடுக்கப்பட்டிருப்பதால் காரின் எந்த பகுதியிலும் எடுத்துச் சென்று சுத்தம் செய்ய முடியும்.
கையில் வைத்து கையாள்வதற்கு மிக எளிதாக இருக்கும் வகையில் இந்த வாக்கம் க்ளீனர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நவீன தொழில்நுட்பம் தூசுகளை வெகு எளிதாக உறிஞ்சும் வகையில் உள்ளது. காருக்குள் தரை விரிப்பு, இருக்கை மற்றும் ஏனைய அனைத்து பகுதிகளையும் இதன் மூலம் எளிதாக சுத்தம் செய்ய முடியும்.
மேலும், அடக்கமாக இருப்பதால் காரிலேயே எப்போதும் வைத்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








