பெங்களூரில் விரைவில் வால்வோ ஹைபிரிட் பஸ் சோதனை ஓட்டம்

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் இந்த புதிய ஹைபிரிட் பஸ்சை முதன்முதலாக வால்வோ காட்சிக்கு வைத்திருந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது பெங்களூரில் இந்த வால்வோ பஸ் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கர்நாடக போக்குவரத்து அமைச்சர் ஆர்.அசோகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
"புதிய ஹைபிரிட் பஸ் 30 சதவீத எரிபொருள் சிக்கனத்தையும், சுற்றுச் சூழல் மாசுபடுவதை 50 சதவீதமும் தடுக்கும். அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த புதிய ஹைபிரிட் பஸ்சின் சோதனை ஓட்டம் துவங்கப்பட உள்ளது.
இரண்டு மாதங்களுக்கு இந்த பஸ் சோதனை முறையில் இயக்கப்படும். சோதன ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன் அதிக அளவில் இந்த பஸ்சை இயக்குவது குறித்து முடிவு எடு்க்கப்படும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








