ஓல்டு ஸ்டாக் 3 சீரிஸ் காருக்கு 7 லட்சம் தள்ளுபடி வழங்கும் பிஎம்டபிள்யூ
இருப்பில் தங்கியிருக்கும் 3 சீரிஸ் கார்களுக்கு விலையில் 7 லட்சம் வரை தள்ளுபடி வழங்குவதாக பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது.
இந்த மாத இறுதியில் புதிய 3 சீரிஸ் காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருகிறது. ஏராளமான புதுமைகள் மற்றும் புதிய வசதிகளுடன் வரும் 3 சீரிஸ் கார் விலையிலும் குறைவாக இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், புதிய 3 சீரிஸ் கார் வரவால் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 3 சீரிஸ் கார்கள் இருப்பில் தங்கிவிட்டன. இதனால், அந்த கார்களை விற்பனை செய்வதற்கு பிஎம்டபிள்யூ அதிரடி தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.
320டி கார்ப்பரேட் எடிசன் வேரியண்ட்டுக்கு விலையில் 6 லட்சம் தள்ளுபடி கிடைக்கும். டைனமிக் வேரியண்ட்டுக்கு 5 லட்சம் தள்ளுபடி பெறலாம். பெட்ரோல் வேரிண்ட்டுக்கு அதிகபட்சமாக 7 லட்சம் வரை தள்ளுபடி சலுகையை வாடிக்கையாளர் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் ரூ.24 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








