இந்திய பிரிவு தலைவரை அதிரடியாக மாற்றும் பிஎம்டபிள்யூ

இந்திய சொகுசு மார்க்கெட்டில் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடையே பங்காளி யுத்தம் நடந்து வருகிறது. மூன்றாம் இடத்தில் இருந்த ஆடி பென்சை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது.
அடுத்து ஓரிரு ஆண்டுகளில் பிஎம்டபிள்யூவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்து விடுவோம் என்று சபதம் போட்டு காய்களை நகர்த்தி வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் ஆடியின் விற்பனையும் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் ஜனவரி-ஜூன் இடையிலான காலகட்டத்தில் ஆடி 4000 கார்களையும், பிஎம்டபிள்யூ 4457 கார்களையும் விற்பனை செய்துள்ளது.
இது பிஎம்டபிள்யூவை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. முதலிடத்தை ஆடி நெருங்கி வருவதால் உஷாரடைந்த பிஎம்டபிள்யூ இந்தியப் பிரிவு தலைவராக இருந்த ஆன்ட்ரியாஸ் சாஃபை அதிரடியாக மாற்ற முடிவு செய்துள்ளது.
இந்தியாவுக்கான புதிய தலைவராக பிலிப் வானை நியமிக்க பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரலில் ஆன்ட்ரியாஸ் சாஃப் இந்திய பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். ஆன்ட்ரியாசின் 3 ஆண்டுகள் கொண்ட பதவிகாலம் முடிவடைய இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், அவரை திடீரென பிஎம்டபிள்யூ மாற்ற முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








