கார் லீசுக்கு விடும் தொழிலை துவங்கியது பிஎம்டபிள்யூ

BMW SUV
தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கார் லீசுக்கு விடும் தொழிலை இந்தியாவிலும் துவங்கியுள்ளது பிஎம்டபிள்யூ.

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் பிஎம்டபிள்யூவுக்குத்தான் முதலிடம்.

இந்த நிலையில்,கடந்த ஆண்டு கார்களை லீசுக்கு விடும் தொழிலை விரைவில் துவங்க இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்தது. இதன்மூலம், குறைந்த முன்பணம் இருந்தாலே பிஎம்டபிள்யூ காரை சொந்த கார் போல் லீசுக்கு பெற்றுவிடலாம்.

எனவே, வாடிக்கையாளர் மத்தியில் இந்த திட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ஒருவழியாக கார் லீஸ் தொழிலை துவங்கியுள்ளது பிஎம்டபிள்யூ.

தனது சொந்த பைனான்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் இந்த திட்டத்தை பிஎம்டபிள்யூ செயல்படுத்துகிறது. மூன்று ஆண்டுகள் அந்த காரை தொடர்ந்து வைத்திருக்கும் உரிமையாளருக்கு மார்க்கெட் விலையை விட குறைவான விலையை கொடுத்து அந்த காரை சொந்தமாக்கிக்கொள்ளும் வாய்ப்பையும் பிஎம்டபிள்யூ வழங்க உள்ளது.

இதன்மூலம், பிஎம்டபிள்யூவின் கார் விற்பனை அதிகரிக்கும் என்பதோடு, வாடிக்கையாளர்களும் அதிக தொகையை கொடுத்து புதிய கார் வாங்குவதை தவிர்க்க முடியும். கார்ப்பரேட் நிறுவனங்கள் தவிர தனி நபர்களும் இத்திட்டத்தின் மூலம் கார்களை லீசுக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் டெல்லி, ஹரியானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் முதல் கட்டமாக துவங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் இந்த கார் லீசுக்கு விடும் தொழில் துவங்க இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 25, 2012, 10:45 [IST]
English summary
BMW India has launched its car leasing business in India. Customers can now have the full ownership experience of a BMW and yet need not pay the full price of the car. The German premium carmaker has named its leasing business as BMW Lease and it will be available through its financial services division.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+