சென்னை வாடிக்கையாளர்களுக்கு கார் டிரைவிங் பயற்சி: பிஎம்டபிள்யூ வழங்குகிறது

BMW Driver Training
சென்னை மற்றும் டெல்லியை சேர்ந்த தனது வாடிக்கையாளர்களுக்கு முறையான டிரைவிங் பயற்சியை பிஎம்டபிள்யூ வழங்க உள்ளது. இந்த வாய்ப்பை விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய பிரிமியம் கார் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், தனது வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை வழங்கும் வகையில் பல்வேறு புதிய முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, சென்னை மற்றும் டெல்லியை சேர்ந்த தனது வாடிக்கையாளர்களுக்கு முறையான டிரைவிங் பயற்சி வழங்கும் சேவையை பிஎம்டபிள்யூ விரைவில் துவங்க உள்ளது. சென்னை, டெல்லியில் உள்ள ஷோரூம்கள் வாயிலாக விருப்பமுள்ள வாடிக்கையாளர்களை தேர்வு செய்து இந்த பிரத்யேக டிரைவிங் பயற்சி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ தலைவர் ஆன்ட்ரியாஸ் சாஃப் கூறியதாவது:

"நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால், தற்போது கார் ஓட்டுவது சவாலான காரியமாக உள்ளது. இதை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக டிரைவிங் பயற்சியை வழங்க உள்ளோம்.

டிரைவிங் திறனை அதிகரித்துக்கொள்ளும் வகையில் இந்த டிரைவிங் பயிற்சி இருக்கும். அனுபவம் வாய்ந்த நிபுணர்களை கொண்டு இந்த டிரைவிங் பயற்சி வழங்கப்படும்.

காரை கையாளும் முறை, அவசர காலத்தில் செயல்படுவது, விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மற்றும் பிஎம்டபிள்யூ கார்களின் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்துவது குறித்த பயற்சிகள் வழங்கப்படும்.

சென்னை, டெல்லியில் உள்ள ஷோரூம்கள் வாயிலாக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு டிரைவிங் பயற்சி வழங்கப்பட உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்," என்று தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 3, 2012, 15:10 [IST]
English summary
Germany luxury car maker BMW to launch driver Training program in India for its Chennai and Delhi customers. Initially, the BMW Driver Training program will be conducted in Delhi and Chennai in this month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+