ஆடியாவது, ஆவணியாவது.. நாங்கதான் நம்பர்-1: பிஎம்டபிள்யூ

கடந்த மே, ஜூன் மாதங்களில் சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடத்தை பிடித்துவிட்டதாக ஆடி தெரிவித்தது. இதனால், முதலிடத்தில் இருந்த பிஎம்டபிள்யூவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மேலும், தனது இந்திய பிரிவு தலைவராக செயல்பட்டு வரும் ஆன்ட்ரியாஸ் சாஃபையும் அதிரடியாக மாற்றியது. அடுத்த மாதம் ஆன்ட்ரியாஸ் சாஃப் திரும்ப பெறப்படுகிறார்.
இந்த நிலையில், கடந்த மாத விற்பனையில் நாங்கள்தான் நம்பர் ஒன் என்று ஆன்ட்ரியாஸ் சாஃபா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கூறியிருப்பதாவது," கடந்த மாதம் 750 கார்களை விற்பனை செய்துள்ளோம். ஆனால், ஆடி நிறுவனம் 718 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
உண்மை நிலை இப்படி இருக்கும்போது ஆடி எப்படி முதல் இடத்தில் இருக்க முடியும்.( ஜூனில் 759 கார்களை விற்பனை செய்திருப்பதாக ஆடி தெரிவித்திருந்தது). இப்ப மட்டுமல்ல, எப்பவுமே நாங்கதான் நம்பர் ஒன்..! இந்த ஆண்டு பிற்பகுதியில் 4 புதிய கார் மாடல்களை களமிறக்க உள்ளோம்.
6 சீரிஸ் கூபே, புதிய எக்ஸ்1 மற்றும் 7 சீரிஸ் ஆகியவை வர இருக்கின்றன. இந்த புதிய மாடல்கள் நிச்சயம் எங்களது விற்பனையை தக்க வைத்துக் கொள்ள உதவும். மேலும், இந்த ஆண்டு 10,000 கார்களுக்கு மேல் விற்பனை செய்வோம்," என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








