ஐ8 ஸ்பைடர் ஹைபிரிட் சூப்பர் காரின் படங்களை வெளியிட்ட பிஎம்டபிள்யூ
மிஷன் இம்பாஸிபிள் ஹாலிவுட் சினிமாவில் வரும் சூப்பர் காரை ஒத்திருக்கிறது ஐ8 சூப்பர் கார். இரண்டு பேர் அமர்ந்து செல்லும் வசதிகொண்ட இந்த புதிய சூப்பர் கார் வரும் 2014ம் ஆண்டில் அறிமுகமாகிறது.
ஐ வரிசையில் பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்ய உள்ள அடுத்த தலைமுறை அம்சங்கள் கொண்ட கார்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். 223 பிஎச்பி ஆற்றலை வாரி இறைக்கும் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் இந்த கார் பெர்ஃபார்மென்சில் பின்னி எடுக்கும் என்று பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
(ஐ-8 காரின் கேலரிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்)
விஷன் எஃபிஷியன்ட் டைனமிக் கான்செப்ட்டில் வடிவமைக்கப்படும் இதன் வெளிப்புறம் கண்களை வெகுவாக கவரும். 0-5 வினாடிகளில் இந்த கார் 100 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும் ஆற்றல் வாய்ந்தது.
2 மணிநேரத்தில் முழு சார்ஜ் ஆகும் இதன் பேட்டரி மூலம் 30 கிமீ தூரம் பயணிக்கலாம். நகர்ப்புறத்தில் சென்று வர ஏதுவாக இருக்கும். இந்த காரின் பேட்டரி கார் ஓடும்போதே சார்ஜ் செய்து கொள்ளும் தொழில்நுட்பம் கொண்டது இதன் சிறப்பம்சம்.


Click it and Unblock the Notifications









