லண்டனில் அட்டகாசமான 'ஐ' ஸ்டோர் திறந்த பிஎம்டபிள்யூ!
எலக்ட்ரிக் கார்களுக்கான தனது முதல் பிரத்யேக ஷோரூமை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் திறந்துள்ளது பிஎம்டபிள்யூ.
ஐ வரிசையில் பல புதிய எலக்ட்ரிக் கார் மாடல்களை பிஎம்டபிள்யூ தயாரித்து வருகிறது. இந்த கார்களை பிஎம்டபிள்யூஐ என்ற பிராண்டு பெயரில் விற்பனை செய்ய பிஎம்டபிள்யூ முடிவு செய்திருக்கிறது.

ஆனால், ஐ பிராண்டு பெயரை பயன்படுத்த ஆப்பிள் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து தனது வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இருப்பினும், லண்டன் மாநகரின் இதயமாக கருதப்படும் பார்க் லேன் பகுதியில் ஐ ஸ்டோர் என்ற பெயரில் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், வாடிக்கையாளர்களை எளிதாக கவர முடியும் என பிஎம்டபிள்யூ கருதுகிறது.
அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் ஐ3 ஹேட்ச்பேக் மற்றும் ஐ8 கூபே ஆகிய கார் மாடல்கள் இங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், எலக்ட்ரிக் பைக்கும் வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








