இந்தியாவில் மினி பிராண்டு கார்கள் அசெம்பிளிங்: பிஎம்டபிள்யூ முடிவு
இந்தியாவிலேயே மினி பிராண்டு கார்களையும் அசெம்பிள் செய்ய பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளது.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மினி பிராண்டு கார்களை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்யப்பட்டவுடன் மினி கார்களுக்கு ஏகப்பட்ட புக்கிங் குவிந்தது.
தற்போது மினி பிராண்டு கார்களை பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்து பிஎம்டபிள்யூ டெலிவிரி கொடுத்து வருகிறது. 30 லட்ச ரூபாயிலிருந்து 42 லட்ச ரூபாய் வரையிலான விலையில் மினி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

வடிவமைப்பு, பெர்ஃபார்மென்சில் நச்சுன்னு இருந்தாலும் விலை கொஞ்சம் அதிகமாக இருப்பதாக பரவலாக பேச்சு எழுந்தது. டீலர்கள் வாயிலாக பிஎம்டபிள்யூ காதுக்கும் செய்தி எட்டியது.
மினி கார்களை வாங்குவதற்கு அதிக விலை ஒரு தடையாக இருப்பதை உணர்ந்து கொண்ட பிஎம்டபிள்யூ மினி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் முடிவுக்கு வந்துள்ளது.
இதன்மூலம், மினி பிராண்டு கார்களின் விலை கணிசமாக குறையும். விற்பனையும் அதிகரிக்கும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது. சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலையிலேயே மினி பிராண்டு கார்களும் அசெம்பிள் செய்யப்பட உள்ளன.
அடுத்த ஆண்டு மத்தியிலிருந்து மினி பிராண்டு கார்கள் சென்னை ஆலையில் அசெம்பிளிங் செய்யப்பட உள்ளன. இந்தியாவில் தற்போது மினி கூப்பர் எஸ், மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள் மற்றும் மினி கன்ட்ரிமேன் ஆகிய கார்கள் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








