ரூ.10 லட்சத்தில் புதிய பைக்கை விற்பனைக்கு கொண்டு வரும் பிஎம்டபிள்யூ

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. பிஎம்டபிள்யூ மோட்டார்டு என்ற பெயரில் இந்த நிறுவனம் சூப்பர் பைக்குகளையும் தயாரித்து வருகிறது.
இந்தியாவில் சூப்பர் பைக்குகளை விற்பனை செய்து வரும் பிஎம்டபிள்யூ இன்னும் உரிய இடத்தை பிடிக்க முடியவில்லை. இதற்கு மற்ற சூப்பர் பைக்குகளை காட்டிலும் பிஎம்டபிள்யூவின் பைக்குகளின் விலை கன்னாபின்னாவென்று அதிகமாக இருப்பதுதான் காரணம்.
இதனால், சொகுசு கார் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு சூப்பர் பைக் மார்க்கெட்டில் அந்த நிறுவனத்தால் உரிய இடத்தை பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், தனது தயாரிப்புகளிலேயே குறைந்த விலை கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்கை பிஎம்டபிள்யூ இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.
என்டூரோ வரிசையை சேர்ந்த எப் 650எஸ் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது பிஎம்டபிள்யூ. இந்த பைக்கில் 2 சிலிண்டர் கொண்ட 798 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த எஞ்சின் 71 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மணிக்கு அதிகபட்சம் 185 கிமீ வேகத்தில் செல்லும் இந்த பைக் 200 கிலோ எடை கொண்டது.
டூரிங் ரகத்தை சேர்ந்தததாக இருந்தாலும் ஆப் ரோடு சாகச பயணங்களுக்கும் ஏற்ற வகையில் இந்த பைக்கின் வடிவமைப்பு இருக்கிறது. மேலும், ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனுடன் கிடைக்கும்.
ரூ.10 லட்சம் விலையில் இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








