இந்தியாவிலும் 3,400 கார்களை திரும்ப பெறும் பிஎம்டபிள்யூ

எலக்ட்ரிக்கல் பிரச்னை காரணமாக சர்வதேச அளவில் 13 லட்சம கார்களை திரும்ப பெறுவதாக பிஎம்டபிள்யூ சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களும் அடங்கும் என்று தற்போது அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2007 முதல் 2010ம் ஆண்டு வரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 5, 6 வரிசை கார்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகாமையில் உள்ள பிஎம்டபிள்யூ ஒர்க்ஷாப்புகளில் வாடிக்கையாளர் சென்றால், அங்கு இலவசமாகவே காரில் இருக்கும் எலக்ட்ரிக்கல் பிரச்னையை சரிசெய்து கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








