சச்சின் டெண்டுல்கரை விளம்பர தூதராக்கும் பிஎம்டபிள்யூ

Sachin Tendulkar
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை விளம்பர தூதராக நியமிக்க பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளது. இதற்காக, விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொகுசு கார் மார்க்கெட்டில் முதல் இடத்தில் இருந்த பிஎம்டபிள்யூ கடந்த இரு மாதங்கள் நிலவரப்படி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. ஆடி நிறுவனத்தால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சமாளிக்கும் முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

மேலும், தனது கார்களை பிரபலப்படுத்த பிஎம்டபிள்யூ இதுவரை விளம்பர தூதராக யாரையும் நியமித்ததில்லை. இந்த நிலையில், முதன்முறையாக தனது கார்களை பிரபலபடுத்துவதற்காக சச்சின் டெண்டுல்கரை விளம்பர தூதராக நியமிக்கிறது பி்எம்டபிள்யூ.

வரும் 27ந் தேதி 3 சீரிஸ் செடான் காரை பிஎம்டபிள்யூ இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அன்றைய தினமே சச்சின் டெண்டுல்கரை பிஎம்டபிள்யூ விளம்பர தூதராக அறிவிக்க இருப்பதாக தெரிகிறது. இதற்காக, விரைவில் ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.

கார்கள் மீது சச்சினுக்கும் தீராத காதல் கொண்டவர்தான். ஃபெராரி முதல் நிசான் வரை பிரபல சூப்பர் கார்களை சொந்தமாக வாங்கி வைத்து ஓட்டி பார்த்து வருகிறார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 24, 2012, 13:54 [IST]
English summary
German car maker BMW to rope with Indian cricket legend Sachin Tendulkar as a brand ambassador soon, reports says.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+