பிஎம்டபிள்யூவின் முதல் ஃப்ரன்ட் வீல் டிரைவ் கார்!

BMW 1 series
தனது முதல் முன்பக்க வீல்களில் டிரைவ் சிஸ்டம் கொண்ட கான்செப்ட் எஸ்யூவி காரை பாரீஸ் மோட்டார் ஷோவில் பிஎம்டபிள்யூ பார்வைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

சொகுசு கார்களுக்கு பெயர் போன பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுவரை பின்புற வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், முதன்முறையாக தனது புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் வேன் ரக காம்பெக்ட் எஸ்யூவி ரக கான்செப்ட் காரில் முன்பக்க வீல்களில் டிரைவிங் சிஸ்டம் கொண்டதாக வடிவமைத்துள்ளது.

விரைவில் துவங்க இருக்கும் பாரீஸ் மோட்டார் ஷோவில் இந்த கான்செப்ட் காரை வெளியுலக பார்வைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. பிஎம்டபிள்யூவின் ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வரும் காம்பெக்ட் கார் என்பதால் இதன் மீது ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மினி பிராண்டு கார் பிளாட்பார்மில் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் வேன் ரக கார் வடிவமைக்க்கப்பட்டிருக்கிறது. வரும் 2014ம் ஆண்டில் பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் பி கிளாஸ் காரின் ஸ்போர்ட்ஸ் டூரர் ரக காருக்கு நேரடி போட்டியை தரும் வடிவமைப்பு மற்றும் அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கும்.

1 சீரிஸ் கிரான் துர்சிமோ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த காரில் 3 சிலிண்டர் மற்றும் 4 சிலிண்டர் கொண்ட டர்போசார்ஜ்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கும். 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களில் கிடைக்கும்.

இதேபோன்று, 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களிலும் கிடைக்கும். தவிர, 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களில் இந்த புதிய கார் கிடைக்கும். இதுதவிர, மினி பிராண்டு கார்களின் எக்ஸ்டிரைவ் மற்றும் ஹைபிரிட் எஞ்சின் மாடல்களிலும் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, August 24, 2012, 11:03 [IST]
English summary
BMW is all set to unveil the first of its many front wheel driven SUVs. The company will be offering a preview of things to come at the 2012 Paris Auto Show where it would showcase the technology in the form of the production version of the BMW Compactive Sports Tourer concept.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+