போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் படங்கள் மற்றும் தகவல்கள்
கடந்த 6ந் தேதி போயிங் நிறுவனத்திடமிருந்து மூன்றாவது ட்ரீம்லைனர் விமானத்தை ஏர் இந்தியா டெலிவிரி பெற்றுள்ளது. சிறந்த கட்டமைப்பு, பயணிகளுக்கு அதிக வசதிகளுடன் வந்திருக்கும் ட்ரீம்லைனர் விமானங்கள் அதிக எரிபொருள் சிக்கனம் தரும் தொழில்நுட்பத்தை கொண்டது. இதனால், உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் இந்த விமானத்தை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு ஆர்டர்களை குவித்துள்ளன.
இதனால், திணறி போன போயிங் நிறுவனம் ட்ரீம்லைனருக்காக புதிய ஆலையையும் திறந்துள்ளது. இதில், தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தைத்தான் ஏர் இந்தியா கடந்த 6ந் தேதி பெற்றுள்ளது. இந்த நிலையில், ட்ரீம்லைனர் விமானத்தின் பிரத்யேக படங்களையும், தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.
இந்த செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள் ட்ரீம்லைனர் விமானத்தின் பொதுவான அம்சங்களை அடிப்படையாக கொண்டது. இந்தியா வந்திருக்கும் ட்ரீம்லைனரில் சில மாற்றங்கள் இருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்கு அவை தவிர்க்கப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானங்களின் பயண அட்டவணை:
சர்வதேச சேவை
சேவை விமான எண் புறப்படும் நேரம் வந்து சேரும் நேரம்
டெல்லி - துபாய் ஏஐ 995 20.55 22.45
துபாய் - டெல்லி ஏஐ 996 00.05 04.45
உள்நாட்டு சேவை
டெல்லி - சென்னை ஏஐ 439 07.00 09.45
சென்னை - டெல்லி ஏஐ 430 10.45 13.25
டெல்லி - பெங்களூரூ ஏஐ 403 16.30 19.10
பெங்களூரூ - டெல்லி ஏஐ 404 20.10 22.45
டெல்லி - பெங்களூரூ ஏஐ 803 06.35 09.10
பெங்களூரூ - டெல்லி ஏஐ 505 10.10 12.25
டெல்லி -கோல்கட்டா ஏஐ 020 14.00 15.55
பெஙகளூரூ-டெல்லி ஏஐ 701 17.00 19.10

வடிவமைப்பு தாத்பரியம்
அதிக இணைப்புகள் இல்லாமல் ஒரே உருளை தத்துவத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால், எடை குறைவதோடு, குறைந்த பராமரிப்பு கொண்டது. அலுமினியத்தை தவிர்த்து 80 சதவீதம் கார்பன் கார்பைட் உள்ளிட்ட கலப்புரு பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் 26 டன் எடையுடன் பறக்கும் திறன் கொண்டது.

விமானிகள் அறை
விமானிகள் சிறப்பாக இயக்குவதற்கு வசதியாக பெரிய திரைகள் மற்றும் நவீன நேவிகேஷன் தொழில்நுட்பங்களுடன் வந்துள்ளது ட்ரீம்லைனர். இரட்டை எஞ்சின் கொண்ட இந்த விமானத்தில் ஜிஇ அல்லது ரோல்ஸ்ராய்ஸ் 1000 டிரென்ட் பொருத்தப்பட்டிருக்கும். இந்த விமானம் அதிகபட்சம் 14,200 கிமீ முதல் 15,200 கிமீ தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது. அதிகபட்சம் மணிக்கு 945 கிமீ வேகத்தில் பறக்கும்.

ஆகாய மிதவை
பிற விமானங்களை ஒப்பிடுகையில் குறைந்த அதிர்வுகள் கொண்டதால் சுகமான மிதவை பயணத்துக்கு கியாரண்டி. இருக்கைக்கு பின்னால் டிவி, சிறிய டிரே ஆகியவையும் உண்டு. 210 பயணிகள் முதல் 250 பயணிகள் வரை பயணிக்க முடியும். உட்புறம் விசாலமான ஹால் போன்று இடவசதியுடன் ஏராளமான சொகுசு வசதிகளையும் கொண்டுள்ளது.

டைனமிக் எல்இடி லைட்
பயணிகளின் வசதிகளை கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ட்ரீம்லைனரில் டைனமிக் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். விமானத்தில் ஏறும்போது இவ்வாறு ஒளிரும் எல்இடி விளக்குகளை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும். இதனை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்கள்.

லஞ்ச் டைமில் தகதகக்கும் எல்இடி லைட்
உணவு பரிமாறும்போது எல்இடி லைட்டுகளின் நிறம் மாறி தங்க நிறத்தில் ஒளிர்கின்றன. கிளப் கிளாஸில் விசாலமான இடவசதியுடன் சொகுசு இருக்கைகள் பிரத்யேக வசதிகளுடன் இருக்கின்றன. இந்த விமானம் 5.77 மீட்டர் அகலமும், 5.97 மீட்டர் உயரமும் கொண்டது. ஏர் இந்தியா வாங்கியிருக்கும் ட்ரீம்லைனரில் 18 பிசினஸ் கிளாஸ் மற்றும் 238 கிளப் கிளாஸ் இருக்கைகளை கொண்டுள்ளது.

உறங்கும் வேளையிலே...!!
தூங்கும் வேளையில் கண்களை உறுத்தாமல் மெல்லிய ஒளி வீசும் எல்இடி விளக்குகள். மொத்தம் 27 ட்ரீம்லைனர் விமானங்களை ஏர் இந்தியா ஆர்டர் கொடுத்தது. அதில், 3 விமானங்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களும் டெலிவிரி கொடுக்கப்பட்டுவிடும்.

விசாலமான ஜன்னல்கள்
பிற விமானங்களை விட விசாலமான கண்ணாடி ஜன்னல்கள் பயண அனுபவத்தை இனிதாக்கும். இந்த விமானத்தில் 3 விதமான ஃபில்டர் தொழில்நுட்பம் மூலம் காற்று சுத்திகரிக்கப்படுவதால், பயணிகளுக்கு தலைவலி உள்ளிட்ட பிரச்னைகள் இருக்காது என்கிறது போயிங்.

பொருட்களை வைப்பதற்கு தாராள இடவசதி
சூட்கேஸ்களை வைக்கும் அளவிற்கு இருக்கைகளுக்கு மேல் பொருட்களை வைப்பதற்கான இடம் இருக்கிறது. இந்த விமானம் புதிய சப்தம் தடுப்பு தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால் கேபினுக்குள் அதிக சப்தம் இருக்காது என்பது கூடுதல் விசேஷம்.


Click it and Unblock the Notifications








