பீட், ஸ்பார்க் கார்களுக்கு செவர்லே இமாலய சலுகைகள்!

Beat Offer
பீட், ஸ்பார்க் பெட்ரோல் கார்களை புக்கிங் செய்பவர்களுக்கு செவர்லே அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை நாளை முதல் 2 நாட்களுக்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவ மழை துவங்குவதற்கு முன்பே கார் நிறுவனங்கள் சலுகை மழையை பொழிய துவங்கிவிட்டன. நாளை மற்றும் நாளை மறுதினம் பீட் மற்றும் ஸ்பார்க் கார்களை புக்கிங் செய்பவர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புடைய பரிசுகளை வழங்க இருப்பதாக செவர்லே அறிவித்துள்ளது.

புக்கிங் செய்யும் வாடிக்கையாளர் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஒரு பைசா செலவில்லாமல் அவர் புக்கிங் செய்த காரையே கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்சிடி டிவி,ஹோம் தியேட்டர்கள், டிவிடி பிளேயர் மற்றும் ஏராளமான நிச்சய பரிசுகளும் காத்திருப்பதாக செவர்லே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் பாலேந்திரன் கூறுகையில்,"முதன்முறையாக பெரிய அளவிலான சிறப்பு பரிசு திட்டத்தை செவர்லே வழங்குகிறது.

கார் வாங்கும்போது வாடிக்கையாளர் சந்தோஷத்தை இந்த பரிசு திட்டம் நிச்சயம் இருமடங்காக்கும். ஸ்பார்க் மற்றும் பீட் கார்கள் மார்க்கெட்டில் அதிக எரிபொருள் சிக்கனம் கொடுக்கும் கார்கள்.

எங்களது தயாரிப்புகளுக்கும், பரிசு திட்டத்துக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பேராதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.

நாளையும், நாளை மறுதினமும் காலை 9 மணிமுதல் இரவு 9மணி வரை இந்த இரண்டு கார்களையும் புக்கிங் செய்பவர்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தும் என்று செவர்லே தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 25, 2012, 10:43 [IST]
English summary
Well, this has been expected but not so soon. Calling it a Blockbuster weekend, General Motors is offering huge take aways worth up to 2 crores if you book a Chevrolet Spark or Beat this weekend.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+