எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை உயரும்?-ஒரு பார்வை

இந்த நிலையில், மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் கார் மாடல்களுக்கு எவ்வளவு விலை உயரும் என்பதை இங்கே பார்க்கலாம்.
அதிகம் விற்பனையாகும் காரான மாருதி ஆல்ட்டோவின் விலை ரூ.4,500 முதல் ரூ.6,000 வரை உயர்த்தப்படும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் சிறிய காரான இயானின் விலை ரூ.5,000 மேல் உயர்த்தப்படும்.
வாடிக்கையாளர்கள் அதிகம் விரும் கார் மாடலான மாருதி ஸ்விப்ட்டின் விலை ரூ.8,000 முதல் ரூ.11,000 வரை உயர்த்தப்படும்.
கடந்த மாதம் விற்பனைக்கு வந்த ஸ்விப்ட் டிசையர் செடான் காரின் விலை ரூ.8,000 முதல் ரூ.13,000 வரை உயரும்.
ஹூண்டாய் புளூயிடிக் வெர்னா காரின் விலை ரூ.11,500 வரை உயரும். ஹோண்டா சிட்டி விலை ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை உயர்கிறது.
டொயோட்டோ கரோல்லா விலை ரூ.26,500 முதல் ரூ.35,200 வரை உயர்கிறது. நம் நாட்டில் அதிகம் விற்பனையாகும் பிரிமியம் எஸ்யூவியான பார்ச்சூனர் விலை ரூ.80,000 அதிகரிக்கிறது.
விற்பனையில் சக்கோபோடு போட்டு வரும் மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி 500 விலை ரூ.35,000 அதிகரிக்கிறது.
இதேபோன்று, சொகுசு கார்களில் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் விலை ரூ.1.50 லட்சம் வரை அதிகரிக்கும்


Click it and Unblock the Notifications








