காஷ்மீர்- பிரிட்டன் இடையே நேரடி பஸ் சேவை துவங்க திட்டம்

சொகுசு பஸ்
காஷ்மீர்-பிரிட்டன் இடையில் நேரடி பஸ் சேவை துவங்க திட்டமிடப்பட்டிருப்பதாக டெய்லி மிரர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரிட்டனிலுள்ள பர்மிங்ஹாம் நகரில் காஷ்மீரை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களுக்கு வசதியாக காஷ்மீரிலுள்ள மிர்பூர், பிரிட்டனிலுள்ள பர்மிங்ஹாம் நகருக்கு இடையில், இந்த புதிய பஸ் சேவையை துவங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 7 நாடுகள் வழியாக இந்த வழித்தடம் செல்கிறது. 6,500 கிமீ நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் மிர்பூரிலிருந்து, பர்மிங்ஹாம் நகரை சென்றடைய 12 நாட்களாகும்.

தாலிபன் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த ஆப்கான் எல்லையையொட்டி உள்ள பாகிஸ்தான் நகரமான குவெட்டா வழியாகவும் இந்த பஸ் செல்லும் என்பதால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த பஸ்சில் ஒருவர் செல்வதற்கு கட்டணமாக 130 பவுண்டுகள்(இந்திய மதிப்பில் 11,300 ரூபாய்) கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. டெல்லியிலிருந்து பர்மிங்ஹாம் நகருக்கு விமானத்தில் செல்ல குறைந்தபட்சம் 40,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், காஷ்மீரிலிருந்து பிரிட்டனுக்கு தரை வழியாக பஸ்சில் செல்லும்போது நான்கில் ஒரு பங்கு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்பதால் வரவேற்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 25, 2012, 10:50 [IST]
English summary
Mirpur in Jammu and Kashmir will now be directly linked by road with the United Kingdom (UK) through a direct bus service, says a report. A new 4,000-mile bus route connecting Birmingham city in UK, will pass through seven countries, including Iran, before finally reaching its destination, also known as 'Little Birmingham'.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+