காருக்கான அலாய் வீல்களின் சாதக, பாதகங்கள்:ஒரு பார்வை

Alloy Wheel
கார்களுக்கான சிறந்த கூடுதல் அக்சஸெரீயாக அலாய் வீல்களை கூற முடியும். வெறும் கவர்ச்சிக்காகவும், கூடுதல் மதிப்பை வழங்குவதற்காக மட்டும் அலாய் வீல்கள் சிறந்தது என்று கூறவில்லை. சிறப்பான கையாளுமை, கூடுதல் மைலேஜ் என பல நன்மைகளை அலாய் வீல்கள் வழங்கும்.

நம் நாட்டு மார்க்கெட்டில் நியோ, பிளாட்டி, எச்ஆர் ரேசிங்(ஹைஜாயின்) உள்ளிட்ட பல பிராண்டுகள் அலாய் வீல் விற்பனையில் முன்னிலை வகிக்கின்றன. அலாய் வீல் ரிம் ஒன்று ரூ.2,500 முதல் ரூ.50,000 விலை வரை விற்கப்படுகின்றன.

சாதாரண ஸ்டீல் வீல்களை விட அலாய் வீல்களில் பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. பாதகமான அம்சங்கள் குறைவே. இங்கே சாதக, பாதங்களை காணலாம்.

சாதகங்கள்:

அலாய் வீல்கள் காருக்கு அதிக கவர்ச்சியை தருகிறது. பல்வேறு டிசைன்களுடன் வருவதால் நம் விருப்பத்திற்கும், காருக்கும் தக்கவாறு அலாய் வீல்களை வாங்கி பொருத்திக் கொள்ள முடியும்.

அலாய் வீல்கள் இலகு எடை கொண்டதாக இருப்பதால் காரின் மொத்த எடை குறைவதால், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கு உதவுகின்றன.

ஸ்டீல் வீல்களைவிட அலாய் வீல்களின் எடை குறைவு என்பதால் காரை ஓட்டும்போது சிறப்பான கையாளுமையை உணர முடியும்.

உறுதியான அலுமினியம்-மக்னீசியம் கலவையில் தயாரிக்கப்படுவதால் சாதாரண ஸ்டீல் வீல்களை விட அலாய் வீல்கள் அதிக உறுதிகொண்டது. இதனால், அதிக பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும். தெறிப்புகள் மற்றும் உடையும் ஆபத்துக்கள் குறைவு.

ட்யூப்லெஸ் டயர்களுக்கு அலாய் வீல்தான் சிறந்த ஜோடி. ஏனெனில், அலாய் வீல்கள் அதிக உறுதித்தன்மை கொண்டிருப்பதோடு, சிறந்த வடிவமைப்பு பெற்றுள்ளதால், அலாய் வீல்களில் ட்யூப்லெஸ் டயர்கள் கச்சிசமாக பொருந்தும். டயருக்குள் காற்றின் அழுத்தமும் சீராக இருக்கும்.

ஸ்டீல் வீல்களை போன்று அலாய் வீல்கள் துருப்பிடிக்காது. குறிப்பாக, கடற்கரையோரங்களில் கார் வைத்து பயன்படுத்துபவர்களுக்கு அலாய் வீல் சிறந்த சாய்ஸ்.

பிரேக் தொழில்நுட்பத்திற்கும் அலாய் வீல்கள் சிறந்த நண்பனாக திகழ்கிறது. அதிக காற்றோட்டம் இருப்பதுதான் காரணம். மேலும், டயர்கள் வெப்பமாவதும் குறையும்.

பாதகங்கள்:

ஸ்டீல் வீல்களை விட அலாய் வீல்கள் மும்மடங்கு விலை அதிகம். இதற்காக, கார் வாங்கும்போது கூடுதல் முதலீடை செய்ய வேண்டியதிருக்கும்.

பெரும்பாலும் சேதமடையாது. இருப்பினும், கரடு முரடான சாலைகளி்ல் செல்லும்போது தெறிப்புகள் ஏற்பட்டாலோ அல்லது உடைந்தாலோ அலாய் வீல்களை பழுதுபார்க்க முடியாது. அப்படியே தூக்கிபோட்டுவிட்டு புதியது மாற்ற வேண்டியதுதான்.

அலாய் வீல்களை பொருத்தினால் அடிக்கடி வீல் பேலன்சிங் செய்வது அவசியம். ஏதெனும், குறை ஏற்பட்டால் அலாய் வீல்களில் சேதம் ஏற்பட்டுவிடும்.

பொதுவாக அலாய் வீல்களில் சாதகமான அம்சங்கள் அதிகம். எனவே, சிறந்த பிராண்டு அலாய் வீல்களை வாங்கி பொருத்துங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, August 6, 2012, 15:11 [IST]
English summary
One of the best accessories that you can get your car is a set of alloys wheels. They not only add great visual impact to the car, but they also aid in handling, because alloys are generally lighter than the regular steel wheels that your car comes with.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+