ஜனவரியில் கார், பைக் விற்பனை அதிகரிப்பு

கடந்த மாதம் உள்நாட்டு மார்க்கெட்டில் 1,96,013 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு விற்பனையுடன்(1,82,852 கார்கள்)ஒப்பிடும்போது, கடந்த ஜனவரியில் கார் விற்பனை 7.19 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதேபோன்று, பைக் விற்பனை தொடர்ச்சியாக கடந்த மாதமும் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் 8,25,887 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், மொத்தமாக 11,13,831 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 13.62 சதவீதம் உயர்வு என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மொத்தத்தில் 14,82,435 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சியாம் அறிக்கை கூறுகிறது.


Click it and Unblock the Notifications








