காரில் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கான 'சைல்டு சீட்'!

ஆனால், சைல்டு சீட்டில் குழந்தையை அமர வைத்து அழைத்துச் சென்றால் அந்த ஆபத்துக்களை குறைத்துக்கொள்ளலாம். சைல்டு சீட்டில் குழந்தைகளை அமர வைத்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பெல்ட்டை சீட்டுடன் இணைத்தால் போதும்.
குழந்தைகளை பற்றி நாம் பயப்பட தேவையில்லை. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சைல்டு சீட் இல்லாமல் குழந்தைகளை அழைத்துச் சென்றால் ஸ்பாட் ஃபைன் நிச்சயம் உண்டு.
ஆனால், இங்கு அதுபோன்ற சட்ட திட்டங்கள் இல்லையென்றாலும், குழந்தையை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல இந்த சைல்டு சீட் மிக அவசியம். சைல்டு சீட்டில் 18 கிலோ எடை கொண்ட குழந்தைகள் வரை அழைத்துச்செல்ல முடியும்.
சைல்டு சீட்டை வேண்டும்போது பொருத்திக்கொள்ளவும், தேவையில்லையென்றால் கழற்றி வைத்து விடவும் முடியும். பெரும்பாலும் 4 வயது வரை குழந்தைகளை அழைத்துச்செல்லும்போது கார்களின் பின்னிருக்கையில் பின்னோக்கி சைல்டு சீட்டை பொருத்த வேண்டும்.
கார் சைல்டு சீட் ரூ.1,000 முதல் மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஆன்லைன் மூலமாகவும் சைல்டு சீட் ஆர்டர் செய்து பெறலாம்.


Click it and Unblock the Notifications








