பண்டிகை கால சலுகைகள்: ஒரு கண்ணோட்டம்

Car Market
பண்டிகை காலத்தில் வழக்கமாக கார் விற்பனையி்ல் அமோகமாக இருக்கும். இதற்காக, பல முன்னணி கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஏராளமான சலுகைகளை அறிவிக்கும். அந்த வகையில், பண்டிகை காலம் துவங்கியுள்ளதால் தற்போது சலுகைகளை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. குறிப்பாக, பெட்ரோல் கார் விற்பனையை அதிகரிக்க பல சலுகைகளை கார் நிறுவனங்கள் வழங்குகின்றன.

கடந்த காலாண்டை விட நடப்பு காலாண்டில் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி நிறுவனம் சலுகைகளை ரூ.15,500 வரை உயர்த்தியிருக்கிறது. கடந்த ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடும்போது இது 25 சதவீதம் வரை அதிகமாகும்.

உதாரணத்திற்கு அரசு ஊழியர்களாக இருந்தால், ஆல்ட்டோ, எஸ்டீலோ மற்றும் ரிட்ஸ்(பெட்ரோல்) கார்களுக்கு ரூ.64,000 வரை சலுகைகளை பெறலாம். மற்றொரு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் சலுகைகளை வழங்குகிறது.

ஐ10 காருக்கு 44,000 ரூபாயும், ஐ20 காருக்கு 32,000 ரூபாயும், இயானுக்கு ரூ.24,250 ரூபாய் மதிப்புடைய சலுகைகளை வழங்குகிறது. போக்ஸ்வேகன் நிறுவனம் தனது போலோ காருக்கு 40,000 ரூபாயும், வென்ட்டோ காருக்கு 30,000 ரூபாயும் சேமிப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, கூடுதல் வசதிகளுடன் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதேபோன்று, அனைத்து கார் நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. எனவே, கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் சலுகைகளை பற்றிய விபரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க் தளத்தை பின்தொடருங்கள்.

சலுகைகள் தவிர அடுத்தடுத்து ஏராளமான புதிய கார் மாடல்களையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது ஆட்டோமொபைல் துறைக்கு புதிய ஊக்கத்தை கொடு்க்கும்.

இந்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் அல்லது அடுத்த இரு நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டால் அது நிச்சயம் பண்டிகை கால விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பண்டிகை காலத்தில் கார் விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கிடக்கும் கார் நிறுவனங்களின் கனவை நிச்சயம் கலைத்துவிடும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 7, 2012, 11:10 [IST]
English summary
All eyes are now trained on the festival season – beginning with Navratras in the northern part of India next month and going on to Diwali and beyond— for automobile sales to pick up. Not only are discounts —specially on petrol cars— at their peak right now, motown has lined up several new launches around the festival season.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+