டீசல் கார் மீது கூடுதல் வரி: கார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு

Honda N Box
டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு, கார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கார் விற்பனை மந்தமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், கூடுதல் வரி விதித்தால், அது கார் தொழிற்துறையில் கடும் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று குரல் கொடுத்துள்ளன.

பெட்ரோல் விலை உயர்வால் டீசல் கார்கள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, டீசல் கார் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. மார்க்கெட் சூழ்நிலையை உணர்ந்து பெட்ரோல் கார் உற்பத்தியை குறைத்து வரும் கார் நிறுவனங்கள் தற்போது டீசல் கார் உற்பத்திக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

டீசல் எஞ்சின் உற்பத்திக்காக பெரும் முதலீட்டில் புதிய ஆலைகளை கட்டவும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், டீசல் நுகர்வு அதிகரித்துள்ளதால் மானியத்தை அதிகப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.

இதனை தவிர்க்க டீசல் கார்கள் மீது ரூ.80,000 வரை கூடுதல் வரி விதிக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதற்கு அனைத்து கார் நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

"கார் விற்பனை ஏற்கனவே படு மந்தமாக இருக்கும் நிலையில், டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதித்தால் அது கார் தயாரிப்பு துறையில் கடும் விளைவுகளை ஏற்படுத்திவிடும்; இது கூடுதல் வரி விதிப்புக்கான நேரமும் அல்ல," என்று அனைத்து நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக அரசுக்கு எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, June 7, 2012, 14:54 [IST]
English summary
Car makers has opposed a proposal by the government to levy higher taxes on diesel-fuelled cars. The finance ministry has been considering this, to check the rising use of the subsidised fuel by car owners.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+