விற்பனையை அதிகரிக்க கார் நிறுவனங்கள் கையிலெடுத்த புது டெக்னிக்

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சில வசதிகளை பிடுங்கிவிட்டு குறைந்த விலை வேரியண்ட்களை அறிமுகப்படுத்தும் புதிய டெக்னிக்கை கார் நிறுவனங்கள் கையாளத் துவங்கியுள்ளன.

பல காரணங்களால் கார் மார்க்கெட் சோதனைகளை சந்தித்து வருகிறது. விற்பனையை அதிகரிக்க சலுகைகளை அறிவிப்பது கார் நிறுவனங்களின் வாடிக்கை. ஆனால், தற்போது புதிய யுக்தி ஒன்றை கார் நிறுவனங்கள் கையாளத் துவங்கியுள்ளன.

Skoda Superb

பிற நிறுவனங்களின் தயாரிப்புகளை விட தங்களது மாடல் அதிக விலை கொண்டதாக இருக்கும் பட்சத்தில் சில வசதிகளை நீக்கிவி்ட்டு புதிய பெயரில் குறைந்த விலை வேரிண்யட்டாக அறிமுகப்படுத்தி வருகின்றன. இதன்மூலம், வாடிக்கையாளரை எளிதாக கவர முடியும் என்பது கார் நிறுவனங்களின் எண்ணம்.

இந்த புதிய யுக்தியை ஸ்கோடா ஆட்டோ ஏற்கனவே துவங்கிவிட்டது. சூப்பர்ப் காரில் இதேபோன்று புதிய குறைந்த விலை வேரியண்ட்டை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இதே யுக்தியை ஹோண்டா கார்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் கையாண்டுள்ளன. சி்ட்டி காரின் கார்ப்பரேட் எடிசன் மற்றும் டாடா ஆரியாவின் புதிய வேரியண்ட் ஆகியவை இதே யுக்தியில் வந்தன.

நிசானும் இந்த திட்டத்தை பயன்படுத்த உள்ளது. மைக்ரா காரில் சில வசதிகளை நீக்கிவிட்டு 50,000 வரை விலையை குறைத்து புதிய வேரியண்ட்டை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது ஹூண்டாய் ஐ10 காருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிகிறது.

இதேபோன்று, வேறு சில கார் நிறுவனங்கள் குறைந்த விலை வேரியண்ட்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களை கையில் வைத்துள்ளன. பிராண்டு மதிப்பு, கொள்கை என எல்லாவற்றையும் விட்டு விட்டு விற்பனையை மட்டும் குறிக்கோளாக கொண்டு களமிறங்கியுள்ளன கார் நிறுவனங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 14, 2012, 12:30 [IST]
English summary
Car makers in India have been facing a slowdown in sales and trying all they can to attract customers to their cars. In fact, it is the cars in the mid-level segment which are affected the most.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+