டிரைவ்ஸ்பார்க் ஆட்டோ ஸோன்: காருக்கான புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள்

இரவு நேரத்தில் நடக்கும் விபத்துக்களுக்கு ஏராளமான காரணங்களை கூறினாலும், போதிய வெளிச்சம் இல்லாததும், சரியான கோணத்தில் ஒளியை பாய்ச்சாத ஹெட்லைட்டுகளும் முக்கிய காரணம். இந்த குறையை போக்கும் விதத்தில் வந்துள்ளதுதான் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள்.
சாதாரண ஹெட்லைட்டுகள் போன்று பிளமென்ட் இல்லாமல் டார்ச் போன்ற குழலில் ஒளி உருவாகும் வகையில் இந்த புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் வடிவமைக்கப்படுகின்றன. சாதாரண ஹெட்லைட்டுகளை விட பன்மடங்கு கூடுதலான வெளிச்சத்தை சரியான திசையில் பீய்ச்சியடிக்கும் திறன் கொண்டது இந்த புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள்.
இந்த ஹெட்லைட்டுகள் பக்கவாட்டிலும் அதிக பிரகாசத்தை அளிக்கும் என்பதால், சாலையின் பக்கவாட்டிலும் சிறப்பாக கண்காணித்து காரை ஓட்ட முடியும். சாதாரண ஹெட்லைட்டுகள் மஞ்சள் நிறத்தில் மங்களான ஒளியை தரும்.
ஆனால், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பால் போன்ற வெள்ளை நிற ஒளி வெள்ளத்தை தரும். இதனால், பள்ளம் மேடான சாலைகளாக இருந்தாலும், நெடுஞ்சாலையாக இருந்தாலும் சாலையை துல்லியமாக கணித்து ஓட்ட முடியும்.
தவிர, எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் கண்களை அதிகம் கூசச்செய்யாது என்பது இதன் கூடுதல் விசேஷம். முதன்முதலில் ஸ்கோடா லாரா காரும், பஜாஜ் பல்சர் 220 பைக்கும் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளுடன் மார்க்கெட்டுக்கு வந்தன.
ஆனால், இப்போது கார் ஆக்சஸெரீஸ் கடைகளில் இந்த புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் தனியாக விற்பனைக்கு கிடைக்கின்றன. காருக்கான புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் ரூ.7,000 விலையிலிருந்தே கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








