கடந்த ஜூனில் கார், பைக் விற்பனை நல்ல வளர்ச்சி

பல நெருக்கடிகளை தாண்டி கடந்த மாதம் கார் மற்றும் பைக் விற்பனை ஓரளவு நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த மாதம் உள்நாட்டு கார் விற்பனை 8.28 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் 1,43,851 கார்கள் விற்பனையிருந்த நிலையில், கடந்த மாதம் 1,55,763 கார்கள் விற்பனையாகி இருக்கி்ன்றன.

Car Bike sales

பட்ஜெட்டுக்கு பின் சோர்ந்து போயிருந்த கார் மார்க்கெட் கடந்த மாதம் எழுச்சி கண்டுள்ளது. மேலும், மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் கடந்த மாதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

மோட்டார்சைக்கிள் மார்க்கெட் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்கிறது. கடந்த மாதம் உள்நாட்டு மோட்டார்சைக்கிள் விற்பனை 6.58 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் உள்நாட்டு மார்க்கெட்டில் 8,79,713 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகியுள்ளன.

மொதத்தில் ஏற்றுமதி உள்பட கடந்த மாதம் மோட்டார்சைக்கிள் விற்பனை 9.2 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோன்று, வர்த்தக வாகனங்கள் விற்பனையும் 4.71 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மாெத்தம் 64,926 வர்த்தக வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

மொத்தத்தில் கடந்த ஜூனில் 14,85,744 வாகனங்கள் விற்பனையாகி இருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் கூட்டமைப்பு(சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 11, 2012, 12:44 [IST]
English summary
Last month was good for Indian automobile industry, according to Society of Indian Automobile Manufacturers (SIAM) car sales grew by 8.28 percent to 1,55,763 units in June 2012 and two-wheeler sales grew by 9.2 percent.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+