கார் விலையை உயர்த்த டொயோட்டோ, ஜிஎம் திட்டம்

Toyota Corolla Altis
ரூபாய் மதிப்பு சரிவு, உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கார் விலையை மீண்டும் உயர்த்த டொயோட்டோ, ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இந்த ஆண்டு துவக்கத்தில் கார் விலையை பெரும்பாலான நிறுவனங்கள் உயர்த்தின. இதையடுத்து, பட்ஜெட்டில் கார்கள் மீதான உற்பத்தி வரி மற்றும் இறக்குமதி உயர்த்தப்பட்டதால், மீண்டும் விலை உயர்வை முன்னணி நிறுவனங்கள் கையிலெடு்த்தன.

கார் கடன் வட்டி வீதம் ஏற்கனவே அதிகரித்திருந்த நிலையில், கார் விலை அடுத்தடுத்து உயர்த்தப்பட்டதால் வாடிக்கையாளர்களின் சுமை அதிகரித்தது.

இந்த நிலையில், மீண்டும் கார் விலையை உயர்த்த கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ரூபாய் மதிப்பு சரிவு, உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை காரணம் காட்டி இந்த முறை விலை உயர்வை அறிவிக்க உள்ளன கார் நிறுவனங்கள்.

"கடந்த சில மாதங்களாக உற்பத்தி செலவீனம் கணிசமாக அதிகரித்துள்ளதால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறோம். எனவே, விலை உயர்வை கையிலெடுப்பதை தவிர வேறு வழியில்லை. இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்," என டொயோட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் கூறினார்.

டொயோட்டோவை தொடர்ந்து செவர்லே பிராண்டில் கார் விற்பனை செய்து வரும் ஜெனரல் மோட்டார்ஸ், மாருதி, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களும் கார் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, May 31, 2012, 10:46 [IST]
English summary
Most of the Carmakers are planning to another price hike-third this year-to offset rising input costs pressures and devaluating rupee.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+